Tuesday, November 06, 2007

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

இந்த நல்ல நாள்ல புதுசா ஒன்னு செய்யலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் .இனி மேல் என்னோட பதிவுல (அதாங்க ப்லோக்ள ) அடிக்கடி தமிழ் எழுத்து இருக்கும் .
முடிந்தால் உங்க கருத்துக்களையும் தமிழ்லயே சொல்லுங்க

எல்லோருக்கும் என்னோட தீபாவளி நல்வாழ்த்துக்கள் .........
சந்தோஷமா கொண்டாடுங்க .
----------------------------------------------------------

அங்கிலத்துல , முன்னாடி "ப்ளோக்" செய்துட்டு இருந்தப்ப ஏற்பட்ட கசப்பான அனுபவத்துக்கப்பரம் , பல முறை மீண்டும் எழுத முயற்சி பண்ணேன் . ஆனா
முன்னாடி இருந்த ஒரு சந்தோஷம் , உற்சாகம் இல்லை .நிறைய நண்பர்கள் தொடர்ந்து எழுதச்சொல்லி பல முறை சொன்னாங்க .அதனால தான் ஆங்கிலத்துல மறுபடி பதிவு செய்ய ஆரம்பிச்சேன் . இப்போ கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு தமிழ்ல ஒரு கால் வைக்கிறேன் .

ஆனா முழுசா தமிழ்ல எவ்வளவு தூரம் செய்ய முடியும்னு தெரியல.
நீரஜ் மாதிரி நண்பர்களையும் அவங்களோட மொபைல் போன்களையும் பத்தி எழுதும் போது ஆங்கிலம் தான் சரி வரும்னு நினைக்கிறேன் .

கடைசியா பள்ளிக்கூடத்துல உன்பதாவது வகுப்பு படிக்கும் போது தமிழ்ல எழுதினேன்.
ரொம்ப நாள் ஆச்சுங்கரதால சின்ன சின்ன தவறுகள் நிச்சயம்
இருக்கும் .தவறுகளை கண்டிப்பா எனக்கு தெரிய படுத்துங்க .
முயற்சி வெற்றி அடையும்னு நம்புறேன் .

2 Comments:

Blogger மஞ்சூர் ராசா said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே. தொடர்ந்து தமிழில் எழுதுங்கள் எழுதியதை ஒரு முறை வாசித்து பாருங்கள். தவறுகள் புலப்படும்.

கண்டிப்பாக நன்றாக எழுதுவீர்கள். வாழ்த்துக்கள்.



முத்தமிழ் குழுமம்
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.
muththamiz.googlegroups.com

November 10, 2007  
Blogger மஞ்சூர் ராசா said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் நண்பரே.

தமிழிலும் வெற்றிகரமாக எழுதுவீர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

November 10, 2007  

Post a Comment

<< Home