Thursday, November 08, 2007

அழகிய தமிழ்மகன்

மதுரை குருவில் நண்பர்களோடு முதல் நாள் படம் பார்த்தேன் .
கல்லூரி நாட்களில் அடிக்கடி முதல் நாள் படம் பார்போம், பெங்களுரு
சென்ற பின் அந்த பழக்கம் நின்றுவிட்டது . அங்கே முதல் நாள் படம் பார்த்தாலும்
மதுரையில் பார்க்கிற அனுபவம் போல் இருக்காது .

அழகிய தமிழ்மகன் சற்றே வித்திசாயமான விஜய் பார்முலா படம்.Final Destination
பார்க்காதவர்கள் ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.பல இடங்களில் Final Destination
காட்சிகளை அப்படியே உபயோகித்து இருக்கிறார்கள். அந்த படத்தை நிறைய பேர்
பார்த்திருக்க மாட்டார்கள் என்று இயக்குனர் நினைத்து விட்டார் போலும் . சின்ன சின்ன மாற்றங்களையாவது செய்து இருக்கலாம் .படத்தின் முதல் பாதி ஓரளவுக்கு சகித்து கொள்ளலாம் .இடைவேளையின் போது ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்தது . படத்தின் பிற்பாதி ரொம்ப மோசம் .குறைந்த பட்சம் படத்தை 30-40 நிமிடங்களைவது குறைத்து இருக்கலாம்.இசை அமைப்பாளருக்கு சம்பளம் கொடுத்த ஒரே காரணத்திற்காக சில பாடல்களை திணித்து இருக்கிறார்கள்.

இயக்குனருக்கு இது முதல் படமாம்.இரண்டாம் பாதியில் பல இடங்களில் அனுபவமின்மை
நன்றாக தெரிந்தது.மிகப்பெரிய நடிகர் பட்டாளம்.பலரை ஊறுகாய் ஆக்கிவிட்டார்கள்
படத்தில் எதிர்பார்ப்பை உண்டாக்கி விறுவிறுப்பை கூட்ட, புதிய திருப்பங்களை வைத்து ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் . விளைவு : படம் பார்க்கும் ரசிகர்கள் தாண்டி காண்டீன் டீ மாஸ்டர் வரை எல்லோரும் அடுத்து வரப்போகும் காட்சிகளை சரியாக யூகித்து விட்டார்கள் .ஓரளவுக்குத்தான் முயற்சி திருவினையாக்கும்.விஜய் அரசியல் பிரவேசம் செய்ய காத்திருக்கிராரா என்று தெரியவில்லை .பாம்பே விஜயை திருத்தி நல்லவராக்கும் நோக்கத்தோடு வைக்கப்பட்ட காட்சிகள் எதுவும் மனதில் ஒட்டவேயில்லை.

படத்தின் நீளத்தை குறைத்து , பாடல் திணிப்புகள் இல்லாமல் , கொஞ்சம் தெளிவான பாதையில் பயணித்து இருந்தால் , என்னதான் சிலர் "final destination-4" என்று கிண்டல் செய்தாலும் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் .இதை விட மோசமான விஜய் படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன. வரும் வாரங்களில் இந்த படத்தின் நிலை தெரியும் .

தீபாவளிக்கு வெளியாகியுள்ள படங்களிலயே இது தான் கொஞ்சம் பரவாயில்லை என்று ஒரு பேச்சு அடிபடுகிறது . ரசிகர்கள் தான் பாவம் .
பொங்கலுக்கவது நல்ல படங்கள் பல திரைக்கு வரும் என்ற நம்பிக்கையில்
இந்த பதிவை முடித்துக்கொள்கிறேன்.

1 Comments:

Blogger மஞ்சூர் ராசா said...

ஆங்கில படம் பார்த்துவிட்டதால் இந்த படம் பார்க்கவேண்டுமா என்ற யோசனை.

விமர்சனத்திற்கு நன்றி ராசா.

November 10, 2007  

Post a Comment

<< Home