Monday, November 12, 2007

மதுரை டைரி

இந்த முறை மதுரையில் செலவிட 4 நாட்கள் கிடைத்தது . இன்னொரு முறை இத்தனை நாட்கள் எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை .வேலைக்கு சேர்ந்த பின் முதல் முறை மதுரை செல்கிறேன். பிறந்த நாள் தீபாவளி என்று அமைந்ததால் நிறைய ஆசைகள், எதிர்பார்ப்புகளுடன் தான் சென்றேன் .
நிறைய நண்பர்களைச் சந்திக்க வேண்டும் , இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன் .வீட்டில் வேறு சில வேலைகளும் வைத்திருந்தார்கள் .

பயணத்தின் தொடக்கமே சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும் . மோசமான பேருந்து .( தயவு செய்து பெங்களூருவில் இருந்து ராஜபாளையம் செல்லும் பர்வீன் பேருந்தில்,இதை படிக்கிற வாசகர்கள் செல்ல வேண்டாம்.)காலையில் பொய் சேரவே 10 மணிக்கு மேல் ஆதி விட்டது . அன்று மதியம் கொஞ்சம் வெளியே சென்றேன் .மாலை நண்பர்களைச் சந்தித்தேன் . எப்பொழுதும் போலவே சற்று நேரம் பேசி விட்டு , அடுத்த 2 தினங்கள் என்ன செய்வது என்று திட்டமிட ஆரம்பித்தோம் . கொடைக்கானல் , கும்பக்கரை என்றெல்லாம் யோசித்து , கடைசியில் நேரமின்மையால் 9 ஆம் தேதி இரவு GRT REGENCY செல்வதென முடிவு செய்தோம். சக் தே இந்தியா படம் பார்த்து விட்டு , வெகு தாமதமாகத்தான் தூங்கினேன் .

அடுத்த நாள் தீபாவளி , 7 30 மணிக்குத்தான் எழுந்திரிக்க முடிந்தது.எப்போதும் போல கொஞ்சம் தொலைகாட்சி , கொஞ்சம் வெடி , கொஞ்சம் வெளியே செல்வதென நாள் நகர்ந்தது .இரவு அழகியதமிழ்மகன் பார்ப்பதென முடிவு செய்திருந்தோம். படத்தை பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன்.முதல் பாதி நன்றாகவே இருந்தது.இரண்டாம் பாதி அந்த நாளின் சந்தோஷத்தையே கெடுத்துவிட்டது. அஜீத் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அடுத்த நாள் மதுரையில் இல்லை .இரவு வந்து நண்பர்களோட முன்னமே முடிவு செய்திருந்தது போல் GRT சென்றேன்.ஏனோ உணவு அவ்வளவு திருப்தியாக இல்லை.

அடுத்த நாள் சில இடங்களில் கையெழுத்து இடுவதிலேயே போய்விட்டது. வரி விளக்கு கிடைக்கும் என்றார்கள்.

கிளம்புவதற்கு மனசேயில்லை .கடைசி நிமிடம் வரை வீட்டில் முக்கியமான காரியம் செய்வதைப் போலவே அலைந்து கொண்டிருந்தேன் .கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நினைத்த சிலரை சந்திக்க முடியவில்லை.அடுத்த முறை நிச்சயம் என்று பலரிடம் சொல்லியிருக்கிறேன்.இதைத் தவிர செய்ய நினைத்த விஷயங்களைச் செய்துவிட்டேன் என்றே நினைக்கிறேன்.

பெங்களூரில் வீட்டிலும் சரி,அலுவலகத்திலும் சரி பெரிய LCD மானிட்டர்கள் தான்.வீட்டில் அந்த பழைய கம்ப்யூட்டரை உபயோகிக்கும் பொழுது ஒரு மாதிரி இருந்தது. அதே போல் வீட்டில் 29 இன்ச் ஸ்க்ரீனில் பார்த்தபிறகு , இங்கே 14 இன்ச்சில் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது.

வாழ்க்கைல சில விஷயங்கள விட்டுகொடுத்து தான் ஆகனும்னு நினைகிறேன்.

1 Comments:

Anonymous Anonymous said...

machi ur thoughts in english also please....tamil padika theriyadhu da...

November 21, 2007  

Post a Comment

<< Home