Monday, November 12, 2007

மதுரை டைரி

இந்த முறை மதுரையில் செலவிட 4 நாட்கள் கிடைத்தது . இன்னொரு முறை இத்தனை நாட்கள் எப்போது கிடைக்கும் என்று தெரியவில்லை .வேலைக்கு சேர்ந்த பின் முதல் முறை மதுரை செல்கிறேன். பிறந்த நாள் தீபாவளி என்று அமைந்ததால் நிறைய ஆசைகள், எதிர்பார்ப்புகளுடன் தான் சென்றேன் .
நிறைய நண்பர்களைச் சந்திக்க வேண்டும் , இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தேன் .வீட்டில் வேறு சில வேலைகளும் வைத்திருந்தார்கள் .

பயணத்தின் தொடக்கமே சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும் . மோசமான பேருந்து .( தயவு செய்து பெங்களூருவில் இருந்து ராஜபாளையம் செல்லும் பர்வீன் பேருந்தில்,இதை படிக்கிற வாசகர்கள் செல்ல வேண்டாம்.)காலையில் பொய் சேரவே 10 மணிக்கு மேல் ஆதி விட்டது . அன்று மதியம் கொஞ்சம் வெளியே சென்றேன் .மாலை நண்பர்களைச் சந்தித்தேன் . எப்பொழுதும் போலவே சற்று நேரம் பேசி விட்டு , அடுத்த 2 தினங்கள் என்ன செய்வது என்று திட்டமிட ஆரம்பித்தோம் . கொடைக்கானல் , கும்பக்கரை என்றெல்லாம் யோசித்து , கடைசியில் நேரமின்மையால் 9 ஆம் தேதி இரவு GRT REGENCY செல்வதென முடிவு செய்தோம். சக் தே இந்தியா படம் பார்த்து விட்டு , வெகு தாமதமாகத்தான் தூங்கினேன் .

அடுத்த நாள் தீபாவளி , 7 30 மணிக்குத்தான் எழுந்திரிக்க முடிந்தது.எப்போதும் போல கொஞ்சம் தொலைகாட்சி , கொஞ்சம் வெடி , கொஞ்சம் வெளியே செல்வதென நாள் நகர்ந்தது .இரவு அழகியதமிழ்மகன் பார்ப்பதென முடிவு செய்திருந்தோம். படத்தை பற்றி ஏற்கனவே சொல்லிவிட்டேன்.முதல் பாதி நன்றாகவே இருந்தது.இரண்டாம் பாதி அந்த நாளின் சந்தோஷத்தையே கெடுத்துவிட்டது. அஜீத் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அடுத்த நாள் மதுரையில் இல்லை .இரவு வந்து நண்பர்களோட முன்னமே முடிவு செய்திருந்தது போல் GRT சென்றேன்.ஏனோ உணவு அவ்வளவு திருப்தியாக இல்லை.

அடுத்த நாள் சில இடங்களில் கையெழுத்து இடுவதிலேயே போய்விட்டது. வரி விளக்கு கிடைக்கும் என்றார்கள்.

கிளம்புவதற்கு மனசேயில்லை .கடைசி நிமிடம் வரை வீட்டில் முக்கியமான காரியம் செய்வதைப் போலவே அலைந்து கொண்டிருந்தேன் .கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று நினைத்த சிலரை சந்திக்க முடியவில்லை.அடுத்த முறை நிச்சயம் என்று பலரிடம் சொல்லியிருக்கிறேன்.இதைத் தவிர செய்ய நினைத்த விஷயங்களைச் செய்துவிட்டேன் என்றே நினைக்கிறேன்.

பெங்களூரில் வீட்டிலும் சரி,அலுவலகத்திலும் சரி பெரிய LCD மானிட்டர்கள் தான்.வீட்டில் அந்த பழைய கம்ப்யூட்டரை உபயோகிக்கும் பொழுது ஒரு மாதிரி இருந்தது. அதே போல் வீட்டில் 29 இன்ச் ஸ்க்ரீனில் பார்த்தபிறகு , இங்கே 14 இன்ச்சில் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது.

வாழ்க்கைல சில விஷயங்கள விட்டுகொடுத்து தான் ஆகனும்னு நினைகிறேன்.

Friday, November 09, 2007

சற்று முன் கிடைத்த தகவல் .......

சற்று முன் கிடைத்த தகவலின் படி ப்ரியாவின் கண்ணாமூச்சி ஏனடா நன்றாக
இருப்பதாக தெரிகிறது . நண்பர் ஒருவர் அதை " light-hearted comedy"என்று சொன்னார் (சரியான தமிழ் வார்த்தை தெரியலீங்க அதான் இப்படி )

Thursday, November 08, 2007

அழகிய தமிழ்மகன்

மதுரை குருவில் நண்பர்களோடு முதல் நாள் படம் பார்த்தேன் .
கல்லூரி நாட்களில் அடிக்கடி முதல் நாள் படம் பார்போம், பெங்களுரு
சென்ற பின் அந்த பழக்கம் நின்றுவிட்டது . அங்கே முதல் நாள் படம் பார்த்தாலும்
மதுரையில் பார்க்கிற அனுபவம் போல் இருக்காது .

அழகிய தமிழ்மகன் சற்றே வித்திசாயமான விஜய் பார்முலா படம்.Final Destination
பார்க்காதவர்கள் ஒரு முறை நிச்சயம் பார்க்கலாம்.பல இடங்களில் Final Destination
காட்சிகளை அப்படியே உபயோகித்து இருக்கிறார்கள். அந்த படத்தை நிறைய பேர்
பார்த்திருக்க மாட்டார்கள் என்று இயக்குனர் நினைத்து விட்டார் போலும் . சின்ன சின்ன மாற்றங்களையாவது செய்து இருக்கலாம் .படத்தின் முதல் பாதி ஓரளவுக்கு சகித்து கொள்ளலாம் .இடைவேளையின் போது ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருந்தது . படத்தின் பிற்பாதி ரொம்ப மோசம் .குறைந்த பட்சம் படத்தை 30-40 நிமிடங்களைவது குறைத்து இருக்கலாம்.இசை அமைப்பாளருக்கு சம்பளம் கொடுத்த ஒரே காரணத்திற்காக சில பாடல்களை திணித்து இருக்கிறார்கள்.

இயக்குனருக்கு இது முதல் படமாம்.இரண்டாம் பாதியில் பல இடங்களில் அனுபவமின்மை
நன்றாக தெரிந்தது.மிகப்பெரிய நடிகர் பட்டாளம்.பலரை ஊறுகாய் ஆக்கிவிட்டார்கள்
படத்தில் எதிர்பார்ப்பை உண்டாக்கி விறுவிறுப்பை கூட்ட, புதிய திருப்பங்களை வைத்து ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் . விளைவு : படம் பார்க்கும் ரசிகர்கள் தாண்டி காண்டீன் டீ மாஸ்டர் வரை எல்லோரும் அடுத்து வரப்போகும் காட்சிகளை சரியாக யூகித்து விட்டார்கள் .ஓரளவுக்குத்தான் முயற்சி திருவினையாக்கும்.விஜய் அரசியல் பிரவேசம் செய்ய காத்திருக்கிராரா என்று தெரியவில்லை .பாம்பே விஜயை திருத்தி நல்லவராக்கும் நோக்கத்தோடு வைக்கப்பட்ட காட்சிகள் எதுவும் மனதில் ஒட்டவேயில்லை.

படத்தின் நீளத்தை குறைத்து , பாடல் திணிப்புகள் இல்லாமல் , கொஞ்சம் தெளிவான பாதையில் பயணித்து இருந்தால் , என்னதான் சிலர் "final destination-4" என்று கிண்டல் செய்தாலும் படம் இன்னும் சிறப்பாக வந்திருக்கும் .இதை விட மோசமான விஜய் படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன. வரும் வாரங்களில் இந்த படத்தின் நிலை தெரியும் .

தீபாவளிக்கு வெளியாகியுள்ள படங்களிலயே இது தான் கொஞ்சம் பரவாயில்லை என்று ஒரு பேச்சு அடிபடுகிறது . ரசிகர்கள் தான் பாவம் .
பொங்கலுக்கவது நல்ல படங்கள் பல திரைக்கு வரும் என்ற நம்பிக்கையில்
இந்த பதிவை முடித்துக்கொள்கிறேன்.

Tuesday, November 06, 2007

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

இந்த நல்ல நாள்ல புதுசா ஒன்னு செய்யலாம்னு முடிவு பண்ணி இருக்கேன் .இனி மேல் என்னோட பதிவுல (அதாங்க ப்லோக்ள ) அடிக்கடி தமிழ் எழுத்து இருக்கும் .
முடிந்தால் உங்க கருத்துக்களையும் தமிழ்லயே சொல்லுங்க

எல்லோருக்கும் என்னோட தீபாவளி நல்வாழ்த்துக்கள் .........
சந்தோஷமா கொண்டாடுங்க .
----------------------------------------------------------

அங்கிலத்துல , முன்னாடி "ப்ளோக்" செய்துட்டு இருந்தப்ப ஏற்பட்ட கசப்பான அனுபவத்துக்கப்பரம் , பல முறை மீண்டும் எழுத முயற்சி பண்ணேன் . ஆனா
முன்னாடி இருந்த ஒரு சந்தோஷம் , உற்சாகம் இல்லை .நிறைய நண்பர்கள் தொடர்ந்து எழுதச்சொல்லி பல முறை சொன்னாங்க .அதனால தான் ஆங்கிலத்துல மறுபடி பதிவு செய்ய ஆரம்பிச்சேன் . இப்போ கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமேன்னு தமிழ்ல ஒரு கால் வைக்கிறேன் .

ஆனா முழுசா தமிழ்ல எவ்வளவு தூரம் செய்ய முடியும்னு தெரியல.
நீரஜ் மாதிரி நண்பர்களையும் அவங்களோட மொபைல் போன்களையும் பத்தி எழுதும் போது ஆங்கிலம் தான் சரி வரும்னு நினைக்கிறேன் .

கடைசியா பள்ளிக்கூடத்துல உன்பதாவது வகுப்பு படிக்கும் போது தமிழ்ல எழுதினேன்.
ரொம்ப நாள் ஆச்சுங்கரதால சின்ன சின்ன தவறுகள் நிச்சயம்
இருக்கும் .தவறுகளை கண்டிப்பா எனக்கு தெரிய படுத்துங்க .
முயற்சி வெற்றி அடையும்னு நம்புறேன் .

HEADING HOME

Going to Madurai for Diwali.

Will get to spend 4 days at home.
The first time, I went home after joining work
I was there in Madurai for only a couple of hours.
So this should count as my first real visit after coming
here to work in Bangalore.


I will switch off Bangalore number for the next few days.
So call my landline number or send me a mail.

If you happen to be in Madurai, call my landline there
or drop a mail , I will be a bit busy but still
will try to meet you :-)

Before I forget,

Wish you all a happy Diwali